முள்ளங்கி பொரியல்

முள்ளங்கி பொரியல்

தேவையானவை:
முள்ளங்கி - 2
துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
நீர் மோர் - தேவைக்கேற்ப

செய்முறை:

முள்ளங்கியை தோல் நீக்கிவிட்டு துருவிக் கொள்ளவும். பிறகு, முள்ளங்கி மூழ்கும் அளவு மோர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும்.
இதனால் வாடையும், சிறுகசப்பு தன்மையும் நீங்கி, நிறம் மாறாமல் இருக்கும். பிறகு, வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய்ச் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து  பிறகு முள்ளங்கியை நீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து எடுத்து சேர்த்து வதக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 10-12 நிமிடம் வேகவிடவும். பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். முள்ளங்கி பொரியல் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com