வாழைக்காய் கொத்துக்கடலை புளிக் கூட்டு

வாழைக்காய் கொத்துக்கடலை புளிக் கூட்டு

(பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காதது)

தேவையானவை:
வாழைக்காய் - 1
கெட்டியாக கரைத்த
புளி கரைசல் - ஒன்றரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
கொத்துமல்லித் தழை - ஒரு பிடி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி

தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறுப்பு கொத்துக்கடலை - 2 கைப்பிடி
(முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து 5 விசில்விட்டு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.)

வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தனியா - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

செய்முறை:

வாழைக்காயைப் பொடியாக நறுக்கி 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து அத்துடன் சிறிது மோர் சேர்த்து அரைப்பதமாக வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  கறுப்பு கொத்துக் கடலையையும் குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பிறகு வேகவைத்த வாழைக்காய் மற்றும் கொத்துக் கடலையை அதனுடன் சேர்த்து வதக்கி புளிக் கரைசல் சேர்க்கவும். பச்சை வாசனை போக 5-7 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக, வறுத்து அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர், 1 தேக்கரண்டி தனியாத் தூள், 1 தேக்கரண்டி தேங்காய்
எண்ணெய், மல்லித் தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com