முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1

வளம் நிறைந்த ஏழு உலகங்களுக்கும்

வள ஏழ்உலகின் முதல்ஆய வானோர் இறையை அருவினையேன்
'களவு ஏழ் வெண்ணெய் தொடுஉண்ட கள்வா' என்பன், பின்னையும்
'தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல்ஆன் ஆயர் தலைவனாய்
இளஏறு ஏழும் தழுவிய எந்தாய்' என்பன் நினைந்து நைந்தே.

வளம் நிறைந்த ஏழு உலகங்களுக்கும் முதன்மையாகத் திகழ்கிறவன் எம்பெருமான், விண்ணோர்களின் தலைவன்,

அத்தகைய எம்பெருமானை, தீர்க்கமுடியாத வினைகளைச் செய்த நான் நினைத்து நோகிறேன், 'எல்லாருக்கும் தெரியும்படியாக வெண்ணெய்யைத் திருடியுண்ட கள்வனே' என்கிறேன், 'முல்லை அரும்புகளைப்போல் புன்னகை செய்யும் நப்பின்னைக்காக வலிமையான பசுக்களை மேய்க்கும் ஆயர்குலத் தலைவனாக வந்தவனே, இளைய எருதுகள் ஏழை அடக்கி அவற்றை வென்றவனே' என்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com