நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 85

பொங்குகின்ற அலைகளைக்கொண்ட, குளிர்ச்சியான,

தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின்மீது பாய்ந்து
எங்கேபுக்கு எத்தவம்செய்திட்டனகொல், பொங்குஓதத்
தண்அம் பால்வேலைவாய்க் கண்வளரும் என்னுடைய
கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்.

பொங்குகின்ற அலைகளைக்கொண்ட, குளிர்ச்சியான, அழகிய பாற்கடலில் கண்வளரும் என்னுடைய கண்ணனின் நல்ல நிறத்தைக் கொண்டிருக்கின்றன இந்த மேகங்கள்,

அதற்காக இவை தொடர்ந்து முயற்சி செய்தன, பரந்து விரிந்த வானத்தின் மீது பாய்ந்தன, அதன்பிறகு அந்த வானத்தில் அவை எங்கே சென்று என்ன தவம் செய்தனவோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com