நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 2

முக்காலத்திலும் எம்பெருமானுக்கு

மனன்அக மலம்அற மலர்மிசை எழுதரும்
மனன்உணர்வு அளவுஇலன், பொறிஉணர்வு அவைஇலன்,
இனன்உணர் முழுநலம் எதிர்,நிகழ், கழிவினும்
இனன்இலன் என்உயிர் மிகுநரை இலனே.

மனத்திலிருக்கும் குறைகளெல்லாம் நீங்கும்படி மனமலரில் எழுந்தருளுபவன் அவன், ஆனால், அவனை நாம் மனத்தால் உணர இயலாது, கண், காது, மூக்கு, வாய், உடல் போன்ற பொறிகளாலும் உணர இயலாது, (அவனுக்கு ஆத்மாவின் தன்மையும் இல்லை, பொருள்களின் தன்மையும் இல்லை)

எதிர்காலம், நிகழ்காலம், இறந்தகாலம் என முக்காலத்திலும் எம்பெருமானுக்கு இணையானவர்கள் / அவனை விஞ்சக்கூடியவர்கள் இல்லை, ஆனந்தமயமானவன் அவன், என் உயிராகத் திகழ்கிறவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com