நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3

எல்லாமாகத் திகழ்கிறவன் அவன்

இலன் அது, உடையன் இது என நினைவு அரியவன்,
நிலன்இடை விசும்புஇடை உருவினன், அருவினன்,
புலனொடு புலன்அலன், ஒழிவுஇலன், பரந்த அந்
நலன்உடை ஒருவனை நணுகினம் நாமே.

எம்பெருமானிடம் அந்தப் பொருள் இல்லை, இந்தப் பொருள் உண்டு என்றெல்லாம் யாராலும் எண்ணக்கூட இயலாது, காரணம், நிலத்திலும் வானிலும் உள்ள உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் அனைத்தும் அவனே,

காணப்படுகின்ற பொருள்கள் எல்லாமாகத் திகழ்கிறவன் அவன், அதேசமயம், அந்தப் பொருள்களின் தன்மைகள் (குணங்கள், குற்றங்கள்) அவனைச் சாராது,

இப்படி எதைவிட்டும் நீங்காமல் எல்லாமாக இருக்கிறவன், பரந்து விரிந்த குணங்களைக்கொண்டவன், ஒப்பற்ற அந்தப் பெருமானை நாம் சேர்ந்தோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com