நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 4

அவன், இவன், உவன் என்கிற உயர்திணை

நாம், அவன், இவன், உவன், அவள், இவள், உவள், எவள்,
தாம், அவர், இவர், உவர், அது, இது, உது, எது,
வீம் அவை, இவை, உவை அவை நலம், தீங்கு, அவை
ஆமவை ஆயவையாய்நின்ற அவரே.

நாம் என்று சொல்லப்படுகிறவை, அவன், இவன், உவன் என்கிற உயர்திணை ஆண்பால் பொருள்கள், அவள், இவள், உவள், எவள் என்கிற உயர்திணைப் பெண்பால் பொருள்கள், தாம், அவர், இவர், உவர் என்கிற உயர்திணைப் பலர்பால் பொருள்கள், அது, இது, உது, எது என்கிற அஃறிணை ஒன்றன்பால் பொருள்கள், அழிகின்ற அவை, இவை, உவை என்கிற அஃறிணைப் பலவின்பால் பொருள்கள் என அனைத்தும், அவை நல்லவையாக இருந்தாலும் சரி, தீயவையாக இருந்தாலும் சரி, உண்டாகும் பொருள்களாக இருந்தாலும் சரி, உண்டான பொருள்களாக இருந்தாலும் சரி, அனைத்தாகவும் நிற்பவன் எம்பெருமானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com