இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி - பாடல் 1, 2

ஒலிக்கும் சங்கினைக் கையில்

கிளர்ஒளி இளமை கெடுவதன்முன்னம்
வளர்ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர்இளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்வுஇலர் ஆகில் சார்வது சதிரே.

கிளர்ந்து வருகின்ற ஒளியைக்கொண்ட இளமையானது கெடுவதற்கு முன்பு, திருமாலிருஞ்சோலைக்கு வாருங்கள்.

வளர்ந்துகொண்டிருக்கும் இளமையைக்கொண்ட (எப்போதும் பசுமையான) பொழில்களால் சூழப்பட்ட அந்தத் திருத்தலத்தில், வளர்ந்துகொண்டிருக்கும் ஒளியைக்கொண்ட மாயோனாகிய திருமாலின் கோயில் இருக்கிறது, அவனுடைய திருவடியைச் சேருங்கள், தளர்வின்றி வாழ அதுவே சிறந்த வழி.

•••

பாடல் - 2

சதிர் இளமடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்,
மதிதவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
பதி அது ஏத்தி எழுவது பயனே.

அழகும் இளமையும் கொண்ட பெண்களுடைய தாழ்வான செயல்களை மதிக்காதீர்கள், அவர்களிடம் சென்று நீங்களும் தாழ்வான செயல்களைச் செய்யாதீர்கள், ஒலிக்கும் சங்கினைக் கையில் ஏந்திய அழகருடைய கோயில், சந்திரன் தவழ்கின்ற உச்சியைக்கொண்ட திருமாலிருஞ்சோலைத் திருத்தலத்தைப் போற்றுங்கள், பிறவியாகிய பெருங்கடலிலிருந்து எழுந்து வாருங்கள், அதுவே இந்த வாழ்வின் பயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com