இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1

மண்ணும் விண்ணும் மொத்தமாக

திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்,
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்டநம்
கண்ணன் கண்அல்லது இல்லை ஓர்கண்ணே.

உறுதியான பரமபதம் தொடங்கி அனைத்து உலகங்களும் அவனே, எல்லையில்லாத நற்குணங்களைக் கொண்டவன் / நம் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவன் அவன், எம்பெருமான்,

மண்ணும் விண்ணும் மொத்தமாக உண்ட அந்தப் பெருமான், நம் கண்ணன், அவனையன்றி நமக்கு வேறு யார்தான் தலைவன்? (வேறு யாருமில்லை!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com