இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11
By சொ. மணியன் | Published on : 21st March 2017 12:00 AM | அ+அ அ- |
வாட்டம்இல்புகழ் வாமனனை, இசை
கூட்டி வண்சடகோபன் சொல்அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்டல்ஆகும் அம் தாமமே.
குறையாப் புகழ்கொண்ட வாமனனை இசையோடு சேர்த்துப்பாடினார் வள்ளல் சடகோபர். இனிய சொற்களால் அமைந்த அந்த ஆயிரம் பாடல்களில், இந்தப் பத்து பாடல்களைப் பாடினால், அவனது திருவடிகளில் அழகிய மலர்களைத் தூவும் பேறு கிடைக்கும்.