இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1

கண்கள் செந்தாமரை போன்றவை

அம்தாமத்து அன்புசெய்து என் ஆவிசேர் அம்மானுக்கு
அம்தாமம், வாழ்முடி, சங்கு, ஆழி, நூல், ஆரம் உள,
செந்தாமரைத் தடம்கண், செங்கனிவாய் செங்கமலம்,
செந்தாமரை அடிகள், செம்பொன் திருஉடம்பே.

எம்பெருமான் பரமபதத்தின் மீது வைக்கிற அன்பை என்மீது வைத்தான், என் உயிரிலே கலந்தான், அழகிய மாலை, திருமுடி, சங்கு, சக்கரம், பூணூல், முத்துமாலை சூடிய அப்பெருமானின் கண்கள் செந்தாமரை போன்றவை, கனியிதழ்களும் செந்தாமரை போன்றவை, திருவடிகளும் செந்தாமரை போன்றவை, அவன் திருமேனியோ செம்பொன்னாகவே திகழ்கிறது. அவனுடைய அழகை என்னென்பேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com