மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

கோவர்த்தனகிரி என்னும் குன்றை

சுமந்து மாமலர், நீர், சுடர், தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றுஎழும் திருவேங்கடம் நம்கட்குச்
சமன்கொள் வீடுதரும் தடம்குன்றமே.

தேவர்கள் தங்களுடைய தலைவனோடு சேர்ந்து மலர்களைச் சுமந்துவந்து, நீர், விளக்கு, வாசனைப்புகை போன்றவற்றைக் கொண்டுவந்து வழிபட்டு வணங்கி எழுகிற திருவேங்கடமலை, அத்தகைய திருவேங்கட மலை நமக்கு ஏற்ற மோட்சத்தைத் தரும் பெரிய குன்றாகும், (அதனை வணங்குவோம்!)

•••

பாடல் - 8

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்றுசேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

கோவர்த்தனகிரி என்னும் குன்றைக் கையில் ஏந்திப் பசுக்களையும் ஆயர்களையும் குளிர்ந்த மழையிலிருந்து காத்தவன், அன்றைக்கு வாமனனாக வந்து உலகை அளந்த பிரான், அனைத்திலும் சிறந்தவன், எம்பெருமான், அத்தகைய பெருமான் சென்றுசேரும் திருவேங்கடம் என்னும் உயர்ந்த மலை ஒன்றைத் தொழுதால் போதும், நம் வினைகள் ஓய்ந்துபோகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com