பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 8

கைவிட்டுச் செல்லாதே
பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 8


பாடல் 8

அசுரர்கள் தலைப்பெயில் எவன்கொல் ஆங்கு என்று
ஆழும் என் ஆர் உயிர், ஆன் பின் போகேல்,
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும், என் கை கழியேல்,
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசி செய் நுண் இடை இள ஆய்ச்சியர், நீ
உகக்கும் நல்லவரொடும் உழிதராயே.

எம்பெருமானே, நீ பசு மேய்க்கச் செல்லும்போது அங்கே அசுரர்கள் வந்தால் என்ன ஆகுமோ என்று என் அரிய உயிர் துன்பத்தில் மூழ்குகிறது. ஆகவே, நீ பசுக்களின் பின்னால் போகாதே, உன்மீது வைத்துள்ள ஈடுபாடும், விருப்பமும், கலவியும் உள்ளிருந்து என்னை நலியச்செய்கின்றன. ஆகவே, என்னைக் கைவிட்டுச் செல்லாதே, ஈர்க்கின்ற உன்னுடைய தாமரைபோன்ற திருக்கண்களையும், திருவாயையும், திருக்கைகளையும், பீதக உடையையும் காண்பித்துக்கொண்டு இங்கே வா, உனக்குப் பிடித்த, ஒசிந்த, நுட்பமான இடையை உடைய இள ஆய்ச்சியர்களோடு வா, அங்குமிங்கும் திரிந்துகொண்டு இங்கேயே இரு, (பசுக்களை மேய்க்கச் செல்லாதே.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com