பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1

ஐம்பூதமாகவும் நின்றவன்
பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1


பாடல் 1

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்,
கார்மேகவண்ணன், கமல நயனத்தன்,
நீர், வானம், மண், எரி, காலாய் நின்ற நேமியான்,
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே.

கார்மேகவண்ணன், தாமரைபோன்ற திருக்கண்களையுடையவன், நீர், வானம், மண், நெருப்பு, காற்று என ஐம்பூதமாகவும் நின்றவன், சக்ராயுதத்தை ஏந்தியவன், தன்னுடைய பெயரை வானவர்கள் சொல்லும் பெருமையுடையவன், எம்பெருமான், அத்தகைய தாமோதரனின் திருவடிகள் பக்திநெறிக்கு ஏற்றவை, அவனை வணங்கி அத்திருவடிகளை நாம் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com