பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1

சிவபெருமானுக்குள் இருப்பவனே
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1

பாடல் 1

முனியே, நான்முகனே, முக்கண் அப்பா, என் பொல்லாக்
கனி வாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே, என் கள்வா,
தனியேன் ஆர் உயிரே, என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன், ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.

மனத்தால் அனைத்தையும் படைப்பவனே, நான்முகனுக்குள் இருப்பவனே, மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்குள் இருப்பவனே, கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவனே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, என் கள்வனே, தனித்திருக்கும் என்னுடைய அரிய உயிரே, என் தலைமீது உன்னுடைய திருவடிகளை வைத்தாய், இனி நான் வேறெங்கும் போகமாட்டேன், என்னிடம் ஏதும் மாயம் செய்யாதே. (எப்போதும் என்னுடன் இரு.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com