பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3

விதிப்படியே நடப்பதாகும்
பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3


பாடல் 3

நண்ணினம் நாராயணனை, நாமங்கள் பல சொல்லி,
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான், விதிவகையே,
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே!

என் நெஞ்சே, எம்பெருமான் நாராயணனின் பல திருப்பெயர்களைச் சொல்லி நாம் வணங்கினோம், அப்பெருமானை நெருங்கினோம், இன்றைக்கு, எம்பெருமான் மண்ணுலகிலே வளங்கள் நிறைந்த திருவாட்டாற்றுக்கு விரைந்து வருகிறான், நமக்குப் பரமபதத்தைத் தருவதற்காகவே அவன் இவ்வாறு வந்திருக்கிறான், இதுவும் நம்முடைய விதிப்படியே நடப்பதாகும், நெஞ்சே, இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நாம் எண்ணியிருப்போமா? (நாம் எண்ணியதைவிடச் சிறப்பாக இவை நடந்துவிட்டனவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com