வரலாற்று உண்மைகள்

வரலாற்று உண்மைகள்- தமிழ் மண் தமிழர் தமிழ் வரலாறு - தமிழ் புகழேந்தி; பக்.348; ரூ.350; பத்மா பதிப்பகம், எண்: 21, லோகநாதன் நகர், 2-ஆவது தெரு, சூளைமேடு, சென்னை-94.
வரலாற்று உண்மைகள்

வரலாற்று உண்மைகள்- தமிழ் மண் தமிழர் தமிழ் வரலாறு - தமிழ் புகழேந்தி; பக்.348; ரூ.350; பத்மா பதிப்பகம், எண்: 21, லோகநாதன் நகர், 2-ஆவது தெரு, சூளைமேடு, சென்னை-94.
தொல்லியல், கல்வெட்டு ஆராய்ச்சியாளரான நூலாசிரியர், தனது 30 ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாக வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பில் தமிழ் மண், தமிழர், தமிழ் வரலாறு தொன்மைக்காலம் முதல் கி.பி. 1947-ஆம் ஆண்டு வரையில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழகத்தின் தொன்மைகளை அகழ்வாய்வு, கல்வெட்டு, மொழியாய்வு வல்லுநர்களின் கருத்துகளைக் கொண்டு விவரிக்கிறார் நூலாசிரியர்.
தமிழ் மன்னர்களைப் பற்றியும், அவர்களது உணர்வுகள் குறித்தும் "நந்திக்கலம்பகம்' நூலின் மூலம் தெரியப்படுத்திய விதம், தமிழ்ப் புத்தாண்டு ஏன் சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கு அளிக்கப்பட்ட விளக்கம், உலக அளவில் சிறந்த ஆட்சியாளன் என்னும் தலைப்பில் ராஜராஜ சோழன் போர் செய்து வென்ற நாடுகள், வெற்றிச் சிறப்புகள் குறித்த பட்டியல் என நூலெங்கும் வியப்புக்குரிய வரலாற்று உண்மைகள் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. பண்டைய தமிழக அளவு முறைகள், தூய தமிழில் தேசிய கீதம், தமிழர் திருமண மந்திரங்கள் உருவாக்கிய விதம் முதலிய அரிய தகவல்கள் வாசகர்களைத் தொடர்ந்து படிக்கத் தூண்டுகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலைப் படித்து முடிக்கும்போது நூலாசிரியரின் அயராத உழைப்பும், தனித் தன்மையும் நம் கண் முன்னே நிழலாடும் என்பது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com