எப்போ வருவாரோ...

எப்போ வருவாரோ... - தொகுப்பாசிரியர்: வள்ளி முத்தையா; பக்.112; ரூ.150; தோழமை வெளியீடு, சென்னை-78; )044-2366 2968.
எப்போ வருவாரோ...

எப்போ வருவாரோ... - தொகுப்பாசிரியர்: வள்ளி முத்தையா; பக்.112; ரூ.150; தோழமை வெளியீடு, சென்னை-78; )044-2366 2968.
எம்.எஸ்.சுப்புலட்சுமி சதாசிவம் தம்பதியருக்கு ரசிகமணி டி.கே.சி. எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்நூல்.
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ரசிகமணி எழுதிய கடிதங்கள், ஒரு பல்சுவை விருந்து. பல தனிப்பட்ட சம்பவங்களை அவை கூறும்போது, சரித்திர நிகழ்வுகளாக அவை நிழலாடுகின்றன.
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அவர் எழுதும் கடிதங்கள், "அருமைப் புதல்வி குஞ்சம்மாளுக்கு' எனத் தொடங்குகின்றன. டி.சதாசிவத்துக்கு எழுதும் கடிதங்கள் "அருமை நண்பர் சதசாசிவத்துக்கு' என்று தொடங்குகின்றன. கடிதங்களின் முடிவில் "அன்புள்ள, டி.கே.சிதம்பரநாதன்' என்றே எழுதி வந்துள்ளார். உடலைப் பேண வேண்டியது எப்படி, கோடை நாள்களில் வீட்டில் உஷ்ணம் வராமல் வைத்துக் கொள்வது எப்படி என்று ஆலோசனை சொல்வது வரை, குடும்ப மூத்தவரின் அக்கறை பல கடிதங்களில் வெளிப்படுகிறது.
எம்.எஸ். - டி.சதாசிவம் திருமண காலத்தில் தொடங்கிய ரசிகமணியின் நட்பு, இறுதிவரை உறுதியாகவும் இனிமையாகவும் இருந்தது. எம்.எஸ். - சதாசிவம் தம்பதியின் வாழ்வில் கிடைத்த ஆசான்கள் வரிசையில் அவரும் இணைந்தார்.
எளிமையான சொற்களைக் கட்டி எழுதப்பட்ட கடிதங்கள் என்றாலும், ஆங்காங்கே தமிழ் இன்பம் சொட்டுவதையும் காண முடிகிறது. அநேகமாக எல்லா கடிதங்களிலும் எதிர்பாராத வகையில் திடீர் திடீரென கரிசல் மண்ணின் தனித் தமிழ் சொற்களும் துள்ளி விழுகின்றன!
தமிழிசை இயக்கம் ரசிகமணி டி.கே.சி.யால் தொடங்கப்பட்டது. அதனை சில குழுக்கள் ஏற்காத போதிலும், கல்கியின் ஆதரவு, எம்.எஸ்.
சுப்புலட்சுமி போன்ற பெரும் கலைஞரின் ஆதரவு கிடைத்ததால் அந்த இயக்கம் உறுதி பெற்றது என்று கூறலாம். எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் புறக்கணிக்கத் துணிந்தவர்களும் பின்னர் அவரை வரவேற்றனர்.
இடைப்பட்ட இக்கட்டான காலத்தில் இசையரசிக்குத் துணையாக இருந்தது டி.கே.சி.யின் ஆசி நிறைந்த கடிதங்கள்தாம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அபூர்வமான படங்கள், இந்த நூல் முழுவதும் கண்ணுக்கு விருந்தாக நிறைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com