தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - டி.கே.இரவீந்திரன்; பக். 231; ரூ.135; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - டி.கே.இரவீந்திரன்; பக். 231; ரூ.135; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.
களப்பிரர் காலத்தை ஏன் தமிழகத்தின் இருண்டகாலமாகக் கருதுகிறோம் என்ற கேள்வியை மையமாக்கியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
களப்பிரர்கள் சமண சமயத்தவர் அல்ல; பெüத்தர்கள் என பல இலக்கியச் சான்றுகள் மூலம் நிலை நிறுத்தியுள்ளார் நூலாசிரியர். அதேசமயம், வைதீக மதத்துக்கு அவர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும் வாதிடுகிறார். ஆனால், "களப்பிரரும் சமயங்களும்' எனும் கட்டுரையில் சமண, பெüத்த சமயப் பிரசாரம் களப்பிரர் காலத்தில் தழைத்து வளர்ந்ததையும், சைவ, வைணவ சமய செயல்பாடுகள் முடங்கியிருந்ததையும் நூலாசிரியரே ஒப்புக்கொள்கிறார். இதுபோல பல நேர் மாறான கருத்துகள் நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
"களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல' என்ற தனது கருத்தை நிலை நாட்ட முயற்சித்துள்ள நூலாசிரியர், "களப்பிரர் காலத்து கலை வளர்ச்சி' எனும் கட்டுரையில் களப்பிரர் காலத்து கலைகள் பற்றிய சரியான சான்றுகள் கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். இந்த நூல், நூலாசிரியரின் கண்ணோட்டத்தில் களப்பிரரை நம் கண்முன் நிறுத்தும் தகவல் களஞ்சியமாக உள்ளது என்று சொல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com