தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு.அம்பிகாபதி (தேர்வு செய்யப்பட்ட உரைகள் பகுதி-1)

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு.அம்பிகாபதி (தேர்வு செய்யப்பட்ட உரைகள் பகுதி-1) - தொகுப்பாசிரியர்: மு.அ.பாரதி; பக்.364; ரூ.250; இயல் வெளியீடு, 23பி/ 2379, தொப்புள் பிள்ளையார் கோயில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர்-613001.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 1977 முதல் 1980 வரை மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த மன்னை.
மு.அம்பிகாபதி, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்துதல், தனியார் பேருந்துகளை அரசுடமையாக்குதல், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மின் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல், விற்பனை வரி உயர்த்தப்படுவது, மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் போன்ற பல முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் ஆற்றிய உரைகள் இப்போதும் முக்கியத்துவம் உள்ளவையாக இருப்பது வியப்பளிக்கிறது.
பல்வேறு புள்ளிவிவரங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் ஆழமும், பொருள் பொதிந்ததுமாகவும் அவர் ஆற்றிய உரைகள், நம்மை ஆழமான சிந்தனைகளுக்கு இட்டுச் செல்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த மாறுதல்களை, நிகழ்ச்சிப் போக்குகளைப் புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com