தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும்

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும் - மு.சண்முகம்பிள்ளை; பக்.192; ரூ.120; பாரி நிலையம், சென்னை; )044-2527 0795.
தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும்

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும் - மு.சண்முகம்பிள்ளை; பக்.192; ரூ.120; பாரி நிலையம், சென்னை; )044-2527 0795.
இன்றைக்கும் பலராலும் அறியப்படாதவர் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை. 15க்கும் மேற்பட்ட நூல்களையும், அச்சுக்கு வராத காப்பியம், சிற்றிலக்கியம், சங்க இலக்கியம் முதலிய 25க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளையும் பதிப்பித்தவர்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1941-42 களில் எழுதப்பட்ட இந்த ஆராய்ச்சி நூல், அவரது குடும்பத்தினரால் இத்தனை காலமும் பாதுகாக்கப்பட்டு, தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் காணப்படும் பல்வேறு கருத்துகளும் செய்திகளும் சுமார் 70 ஆண்டுக்கு முன் நூலாசிரியரால் ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பதை மறக்காமல் நூலைப் படிக்க வேண்டும். ஏனென்றால், இந்த எழுபது ஆண்டுகளில் தொல்காப்பியம் குறித்துப் பல்வேறு ஆராய்ச்சி நூல்களும், ஆய்வேடுகளும், புதிய புதிய ஆய்வுகளும், மீள் பார்வை ஆய்வுகளும் வந்துவிட்டன.
"மொழியின் இயல்பு' என்ற முதற்பகுதியில் மொழி உருவான விதம், காலத்திற்குக் காலம் மொழியானது பிறமொழிகளோடு கலந்து, திரிந்து, மாறி, தேய்ந்து, சிதைந்து, கிளைமொழிகளாகி எப்படி வளர்ந்தது என்னும் தன்மையை விளக்கியுள்ளார்.
÷அவ்வாறே "இலக்கணங்களின் கூறுபாடு' என்ற பகுதியில், மொழியின் தன்மையை வரலாற்று முறையில் ஆய்வோருக்கு தொல்காப்பியர் கால வழக்குகளில் சிலவற்றை அவை புலப்படுத்துவதை, தொல்காப்பிய உரையாசிரியர்களின் கூற்றுக்களைக் கொண்டு விளக்கியுள்ளார்.
÷மேலும் இந்நூலில், தொல்காப்பியத்தின் காலவரையறை, தொல்காப்பியரது ஆராய்ச்சித் திறன், மொழி தொடர்பான, இலக்கியம் தொடர்பான முன்னையோர் கூற்றுகள், தொல்காப்பிய நூலின் அமைப்பு (எழுத்து, சொல், பொருள்), தொல்காப்பியர் காலத்துத் தமிழ், இலக்கியம், தமிழுலகு முதலியவை நன்கு ஆராயப்பட்டுள்ளன. ÷இந்நூலைப் படிக்கும்போது ஏதேனும் நெருடல்களோ, சந்தேகங்களோ, முரண்பாடான கருத்துகளோ தோன்றினால், இரண்டாம் பத்தியைக் கவனமாகப் படிக்கவும். காலம்கடந்து வெளிவந்திருந்தாலும், தொல்காப்பியம் குறித்த மிகச்சிறந்த ஆராய்ச்சி நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com