பொதுமக்களும் சட்டங்களும்

பொதுமக்களும் சட்டங்களும் - ஜி.சி.வெங்கட சுப்பா ராவ்; தமிழில்:  க.ராஜாராம்; பக்.304; ரூ.150; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை- 40.

பொதுமக்களும் சட்டங்களும் - ஜி.சி.வெங்கட சுப்பா ராவ்; தமிழில்:  க.ராஜாராம்; பக்.304; ரூ.150; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை- 40.
நமது நாட்டின் ஆட்சிமுறை, திருமணச் சட்டங்கள், சொத்து மற்றும் குற்றவியல் சட்டங்கள் என வாழ்க்கை சம்பந்தப்பட்ட முக்கியமான சட்டங்கள் குறித்து இந்த நூலில் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை நடவடிக்கைகள், சொத்துரிமையில் உள்ள சிக்கல்கள், கலப்புத் திருமணம் பற்றிய விளக்கங்கள் என 1960-களில் இருந்த சட்ட நடைமுறைகள் அலசி ஆராயப்பட்டுள்ளன.
சட்டம், நெறிமுறைகள் ஆகியவற்றை உரையாடல்கள், உவமைகள், உதாரணங்கள், கதைகள் மூலம் விவரித்திருப்பது பாராட்டத்தக்கது.
இந்த நூலில் 1960 முந்தைய கால கட்டத்தில் இருந்த சட்டங்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்தச் சட்டங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பிரிவிலும் நமது உரிமைகள் எப்படி இருந்தன, வியாபார ஒப்பந்தங்களின் தன்மை எப்படி இருந்தன என்பன போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com