சட்டப் பேரவையில் எனது பணிகள்

சட்டப் பேரவையில் எனது பணிகள் - டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்; பக்.360; ரூ.255; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; )044 - 2489 0151.
சட்டப் பேரவையில் எனது பணிகள்

சட்டப் பேரவையில் எனது பணிகள் - டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்; பக்.360; ரூ.255; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; )044 - 2489 0151.
மருத்துவரான நூலாசிரியர், 1996-2001, 2006-2011 ஆகிய பத்தாண்டுகள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அப்போது அவர் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து ஆற்றிய உரைகளும், அதற்கான பதில்களும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 10 ஆண்டு காலத்தில் பள்ளிப்பட்டு தொகுதியில் அவர் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 
சாதாரண மக்களின் பல்வேறு பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான கோரிக்கைகளை தனது உரையின் மூலம் சட்டமன்றக் கூட்டங்களில் மிகத் தெளிவாக நூலாசிரியர் எழுப்பியிருக்கிறார். சான்றாகச் சிலவற்றை எடுத்துக்காட்டலாம். 
" பழுப்பு நிறமடைந்து, முகர்ந்து பார்த்தாலே ஒரு வாசனை வந்தால், அது ரேஷன்கடை அரிசி என்ற ஓர் அடையாளம் கூட இருக்கிறது. இந்த நிலைமையை அரசு ஆராய்ந்து, செயல்பட வேண்டும்.'
"விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளமான நாடுகள் வாங்குவதால், கைத்தறிகளை விசைத்தறிகளாக மாற்ற அரசு உதவ வேண்டும்.'
"சர்க்கரை நோயாளிகளுக்குத் தனியான மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்.' 
"காய்கறிகள் அழுகாவண்ணம் விளைபொருள் விளைகின்ற இடத்திலோ அல்லது சேமிக்கின்ற இடத்திலோ குளிர்பதன கிடங்குகள் அமைப்பதற்கு அரசு முன் வர வேண்டும்.' இவ்வாறு மக்களின் பிரச்னைகளைப் பேசிய சிறந்த சட்டமன்ற உறுப்பினரான நூலாசிரியரின் இந்த நூல் ஓர் அரிய பதிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com