பாரத ஜன சபை- காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்

பாரத ஜன சபை- காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம் - சி.சுப்பிரமணிய பாரதி; பதிப்பாசிரியர்: நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.411; ரூ.150; ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சிஐடி நகர்,சென்னை-35.
பாரத ஜன சபை- காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்

பாரத ஜன சபை- காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம் - சி.சுப்பிரமணிய பாரதி; பதிப்பாசிரியர்: நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.411; ரூ.150; ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சிஐடி நகர்,சென்னை-35.
இந்திய தேசிய காங்கிரஸ் என இன்று அறியப்படும் அமைப்பின் தமிழ்ப் பெயர்தான் பாரத ஜன சபை. மகாகவி 1918, 1920-இல் இரு பாகங்களாக எழுதிய வரலாற்றை நல்லி குப்புசாமி மறுபதிப்பு செய்துள்ளார். 1885-இல் அதன் தோற்றம் முதல் இருபதாண்டு கால வரலாற்றுச் சுருக்கம், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தாங்கி வருகிறது இந்தப் புத்தகம். இது மிக அரிய புத்தகம் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை. "பாரத ஜாதீய ஐக்ய சங்கம்' என்று முதலில் பெயரிடப்பட்டு, பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயர் முடிவாயிற்று என்பது முதல் ஏராளமான பொக்கிஷங்கள் இதில் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் முதல் மாநாட்டின் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஆட்சிமுறைகள், ராணுவ நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்தும் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அரசுப் பணிக்காக இங்கிலாந்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தேர்வுகளை இந்தியாவிலும் நடத்தி, வெற்றி பெற்ற அனைவரின் பெயர்களையும் ஒரே பட்டியலாக வெளியிட்டு நியமன வாய்ப்புகளைச் சரிசமமாக இருக்கச் செய்ய வேண்டும் என்கிறது ஒரு தீர்மானம். அக்காலத்தின் சீரிய சிந்தனையாளர்கள் தேச நலனை முன்னிட்டு செயல்பட்ட விதம் குறித்து இந்தப் புத்தகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள வேளையில் இந்த நூலின் புதிய பதிப்பு வெளியாவது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் தோற்றம், லட்சியம், ஆரம்ப கால செயல்பாடுகள் தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், அரசியல் வேட்கை உள்ள அனைவருக்கும் விளங்க இந்தப்
புத்தகம் உதவும். மேலும் பல முக்கியத் தகவல்களைத் தொகுத்து "சிறப்புக் குறிப்புகள்" என்ற இணைப்பு நூலாக நல்லி அளித்திருக்கிறார். மகாகவியின் நூலுக்கு சிறந்த அணிகலனாகவும் காலத்துக்கேற்ற முக்கியப் பங்களிப்பாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com