டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம் -  சாந்தகுமாரி சிவகடாட்சம்; பக்.397; ரூ.600; சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், 1, லட்சுமிபுரம், 2-ஆவது தெரு, ராயப்பேட்டை,  சென்னை - 14.
டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம் -  சாந்தகுமாரி சிவகடாட்சம்; பக்.397; ரூ.600; சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், 1, லட்சுமிபுரம், 2-ஆவது தெரு, ராயப்பேட்டை,  சென்னை - 14.
டாக்டர் என். ரங்கபாஷ்யம் என்கிற டாக்டர் என்.ஆரின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல, மருத்துவத்துறையின் வளர்ச்சியையும் இந்நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியம்.
தந்தையைப் போல் தானும் மருத்துவராகி, சிரமப்படக் கூடாது என்று நினைத்து விமானியாக விருப்பப்பட்டவர் ரங்கபாஷ்யம். ஆனால் ரமணரின் ஆலோசனைப்படி மருத்துவம் படிக்கச் சென்றார். அதன் விளைவு, இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை என்ற துறையை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். இந்தப் பிரிவை அவர் தொடங்கிய கால கட்டங்களில் மேலைநாடுகளில் மட்டுமே இருதயவியல், நரம்பியல் என்று தனிப்பட்ட துறைகள் இருந்தன.
மிகப்பெரிய முக்கியஸ்தர்களும், சாதாரண ஆட்டோ ஓட்டுநரும் அவரை வாழ்த்துவார்கள். மருத்துவத்தைத் தொழிலாக நினைக்காமல் சேவையாகக் கருதியவர் டாக்டர் என்.ஆர்.
இந்தப் புத்தகத்தில் அவரது பிறப்பு, இளமைக்காலம், படிப்பு, மருத்துவச் சேவை, ஆசிரியர் பணி, குடும்பம் என அனைத்தையும் நாவலைப் போன்று சுவாரசியமாக விவரித்திருக்கிறார் ஆசிரியர் சாந்தகுமாரி சிவகடாட்சம்.
டாக்டர் என்.ஆரின் சேவை, கருணை, நோயாளிகளின் மீது அன்பு ஆகியவற்றை விளக்கும் சில நிகழ்வுகள் வாசிப்போரை நெகிழச் செய்கின்றன.
மருத்துவத் துறையினர் மட்டுமின்றி, அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமை டாக்டர் ரங்கபாஷ்யம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com