திரைத்தொண்டர்

திரைத்தொண்டர் - பஞ்சு அருணாசலம்; பக்.288; ரூ.185; விகடன் பிரசுரம், சென்னை-2; 044-4263 4283.
திரைத்தொண்டர்

திரைத்தொண்டர் - பஞ்சு அருணாசலம்; பக்.288; ரூ.185; விகடன் பிரசுரம், சென்னை-2; 044-4263 4283.
அறுபது ஆண்டுகால தமிழ்த் திரையுலக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிற பஞ்சு அருணாசலத்தின் சுய
சரிதை இந்நூல்.
பஞ்சு அருணாசலத்தின் தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், சம்பளத்துக்கு வேலை செய்வதை அவமானமாகக் கருதி, வேலைக்குப் போகாமல் இருந்ததால், அம்மாவின் நகைகள் அத்தனையையும் இழக்க நேரிடுகிறது. அந்தக் கோபத்தில் முதன் முதலாக அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி, பணம் சம்பாதிக்க பஞ்சு அருணாசலம் சென்னைக்கு ரயில் ஏறியது, நெஞ்சை நெகிழச் செய்கின்றது.
பின்பு, கவியரசு கண்ணதாசனிடம் 12 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றுதல், பின்பு, பாடல், கதை, திரைக்கதை எழுதுதல், படம் தயாரித்தல், இசையமைப்பாளராக இளையராஜாவை அறிமுகம் செய்தல், ஸ்டைல் நடிகராகப் பெயர்பெற்ற ரஜினியின் குணச்சித்திர ஆற்றலை வெளிக்கொணர்தல், வெற்றிப் படத்திலும் நஷ்டம் அடைந்த அனுபவம், வாழ்க்கைப் பாதையில் அவர் சந்தித்த சவால்கள், சாதித்த சாதனைகள் என எல்லாமும் கண்முன் காட்சிகளாக விரிகின்றன. கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறன்பெற்று ஒளி வீசிய பஞ்சு அருணாசலம், நம்முடன் நேரில் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது இந்த நூலின் தனிச்சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com