கவிஞர்.அருண்பாரதியின் “புதிய பானையில் பழைய சோறு”:  நூல் வெளியீட்டு விழா

கவிஞர்.அருண்பாரதியின் “புதிய பானையில் பழைய சோறு” என்னும் கவிதைப் புத்தக வெளியீட்டு விழா  கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
கவிஞர்.அருண்பாரதியின் “புதிய பானையில் பழைய சோறு”:  நூல் வெளியீட்டு விழா

கவிஞர்.அருண்பாரதியின் “புதிய பானையில் பழைய சோறு” என்னும் கவிதைப் புத்தக வெளியீட்டு விழா  கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

கவிக்கோ.அப்துல்ரகுமான் அவர்கள் இந் நிகழ்ச்சிக்கு தலைமைதாங்க, இயக்குநர்.கே.பாக்யராஜ் புத்தகத்தை வெளியிட, இயக்குநர். என்.லிங்குசாமி மற்றும் திரை, தமிழ் ஆளுமைகள் சூழ பெற்றுக் கொண்டார்.
தலைமை தாங்கிய கவிக்கோ.அப்துல்ரகுமான் இப் புத்தகம் ஒரு ஆவணம். கவிதையில்

உனக்கு தனிநடை வாய்த்திருக்கிறது. யாருக்காகவும் எதற்காவும், உன் நடையை விட்டுக் கொடுக்காதே.... சினிமாவில் இருந்தாலும் கவிதைகளை தொலைத்து விடாதே.... என்று அருண் பாரதிக்கு அறிவுறுத்தினார்.

கவிஞர்.அறிவுமதி தனக்கும் பாக்யராஜ் அவர்களுக்குமான நட்பை, பழைய நினைவுகளை பேசிவிட்டு, என் தம்பி அருண்பாரதியை வெளிச்சப்படுத்தக் கூடிய மேடை இது. அவனுக்கு நான் வாழ்த்துரை வழங்குவதை விட, அவனுக்காக இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் என நெகிழ்ச்சியாக முடித்தார். 

அருண்பாரதி என்னை கூப்பிடலனாலும், நான் இங்க வந்து எல்லோரும் பேசுனத கேட்டிருப்பேன். சினிமாவுல எனக்கு பாட்டெழுத போறாரு. பழைய சோறோடு கொஞ்சம் ஓட்சும் எனக்கு கலந்து கொடுங்க என்று புன்னகையோடு முடித்தார் இசையமைப்பாளர். ஜிப்ரான்.

இயக்குநர்.பிருந்தாசாரதி இயக்குநர் இமயம்.பாரதிராஜா அருண்பாரதிக்கு எழுதிய, வாழ்த்துரைய மேற்கோள் காட்டி பேசினார். தொடர்ந்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் வரிசைகட்டி கவிஞர். அருண்பாரதியையும், பிறந்தநாள் விழா காணும் இயக்குநர்.கே.பாக்யராஜ் அவர்களையும் பாராட்டினார்கள்.

இயக்குநர்.தாமிரா, இயக்குநர்.மீரா கதிரவன், திரை எழுத்தாளர்.அஜயன்பாலா, நடிகர்.மாரிமுத்து, கவிஞர்.பழனிபாரதி, மக்கள் தொடர்பாளர்கள்.மௌனம்ரவி, டைமன்ட் பாபு, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், முன்னணி பாடலாசிரியர்கள் என, பார்வையாளர்களே சிறப்பு விருந்தினர்களாக அமைந்தது இந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com