தமிழ் இலக்கிய வினா-விடைக் களஞ்சியம்

தமிழ் இலக்கிய வினா-விடைக் களஞ்சியம் - நா.சிவாஜிகபிலன்; பக்.512; ரூ.250; நாகுப்பிள்ளை வெளியீட்டகம், 9, கெளதமா கார்டன், திருவள்ளுவர் நகர், தஞ்சாவூர்-1.
தமிழ் இலக்கிய வினா-விடைக் களஞ்சியம்

தமிழ் இலக்கிய வினா-விடைக் களஞ்சியம் - நா.சிவாஜிகபிலன்; பக்.512; ரூ.250; நாகுப்பிள்ளை வெளியீட்டகம், 9, கெளதமா கார்டன், திருவள்ளுவர் நகர், தஞ்சாவூர்-1.
"ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் இலக்கியத்தை மிகவும் எளிமையாகப் பயிற்றுவிக்க முடியுமா?' என்ற வினா யாருக்காவது எழுந்தால், அதற்கு இந்த வினா-விடைக் களஞ்சியம் விடை கூறுகிறது; பொது அறிவுப் பொக்கிஷமாகவும் திகழ்கிறது. இதை அகர வரிசைப்படுத்தித் தந்துள்ள ஆசிரியரின் முயற்சியையும் உழைப்பையும் பாராட்டலாம்.
சங்க இலக்கியம், இலக்கணம், உரையாசிரியர்கள், மொழியியல், பக்தி இலக்கியம், காப்பியங்கள், அற இலக்கியம், சிற்றிலக்கியம், இக்கால இலக்கியம், சிறுகதை, கவிதை நாடகம், புதினம், புராணங்கள், கலைகள், மொழி பெயர்ப்புகள், சைவ சித்தாந்தம், இசுலாமிய, கிறிஸ்துவ இலக்கியங்கள், இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுகள், முதலியவற்றை ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறது. யு.ஜி.சி. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் இதில் விடைகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக சில: "தொல்காப்பியரின் இயற்பெயர் - திரணதூமாக்கினியார்'; "பெண்ணின் வீரத்தைக் குறிக்கும் புறத்துறை - மூதின் முல்லை'; "பால் காட்டும் உருபு இல்லாத மொழி - தெலுங்கு'
இதழ்கள், எண்கள், ஆண்டுகள், உறவுகள்; சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்; தமிழ் நூல்களின் அடைமொழிகள்; தமிழறிஞர்களின் புனை பெயர்கள் - இயற்பெயர்கள்; ஓரெழுத்து ஒரு மொழிகள்; நாட்டுடைமை ஆக்கப்பப்பட்ட நூலாசிரியர்களின் படைப்புகள்; ஞான பீடம் பரிசு பெற்றோர் பற்றிய தகவல்கள்; 354 நாடக நூல்கள், நூலாசிரியர்களின் பெயர்கள்; 1262 புதினங்கள், அதன் ஆசிரியர்கள்; 1355 சிறுகதைகள், அதன் ஆசிரியர்கள்; 390 கவிதைகள், அவற்றை எழுதிய கவிஞர்கள்; 2369 பொது நூல்கள், அதன் ஆசிரியர்கள்; 87க்கும் மேற்பட்ட மேற்கோள் பாடல்கள், அவற்றை எழுதியவர் பெயர்கள், மûறைந்து போன நூல்களின் பட்டியல் - என இவ்வாறு அனைத்துத் தகவல்களும் இக்களஞ்சியத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com