எளிமையின் ஏந்தல் - தோழர் ஆர்.நல்லகண்ணுவின் கட்டுரைகள் - தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி

எளிமையின் ஏந்தல் - தோழர் ஆர்.நல்லகண்ணுவின் கட்டுரைகள் - தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி

எளிமையின் ஏந்தல் - தோழர் ஆர்.நல்லகண்ணுவின் கட்டுரைகள் - தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி ; பக்.296 ; ரூ.296 ; மேன்மை வெளியீடு, சென்னை-14 ; )044- 2847 2058.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு எழுதிய கடந்த 40 ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். தொழிலாளர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, கச்சத் தீவு பிரச்னை, ஈழவிடுதலைப் போர், பழங்குடியின மக்களின் போராட்டங்கள் என பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய தனது தெளிவான பார்வைகளை நூலாசிரியர் முன் வைக்கிறார்.
இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி, எம்.வி.சுந்தரம், ஏ.எம்.கோபு உள்ளிட்ட பல தலைவர்களைப் பற்றி மட்டுமல்லாமல், கக்கன், மு.வரதராசனார், நம்மாழ்வார் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
'தமிழ்நாட்டைப் பாதிக்கும் காவிரி நதி நீர்ப் பிரச்னை மட்டும் தீர்க்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதால்- அது தமிழ்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும் அபாயம் ஏற்பட்டு விட்டது' என்று 1985 இல் அவர் எழுதியதைப் படிக்கும்போது இன்றளவும் காவிரிப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது வேதனை தருகிறது. 'தமிழன் என்று அதிகமாகப் பேசும் பல அரசியல்வாதிகளும், பல அறிவாளிகளும் சாதிக் கூட்டை விட்டு வெளியேறவில்லை. சாதி அமைப்புகளை விதை
முதலாகக் கொண்டு தங்களை முன்னேற்ற முனைகிறார்கள். இதை சம்பந்தப்பட்ட சாதி இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய காலம் வரும்' என்று 1999 இல் எழுதிய கட்டுரையும் இப்போதைய அரசியல் சூழ்நிலைக்குப் பொருந்துவதாக உள்ளது. சமூக அக்கறை உள்ள அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com