பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் - தொகுப்பாசிரியர்: இரா.மோகன்

பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் - தொகுப்பாசிரியர்: இரா.மோகன்

பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் - தொகுப்பாசிரியர்: இரா.மோகன் ; பக்.604 ; ரூ.450 ; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை -625001 ;
)0452- 2345971.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகிய இந்நூலாசிரியர், 1975- 2011 காலகட்டத்தில் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
ஜெயகாந்தனின் 'பாவம் இவள் ஒரு பாப்பாத்தி' நாவல் 1979 இல் வெளிவந்தது. ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலோ 1905 இல் வெளிவந்தது. நாடு, மொழி, காலம், சமூகச் சூழ்நிலை ஆகியவை முற்றிலும் வேறுபட்டவையாக உள்ள இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு அவர் செய்த ஆய்வு வியக்க வைக்கிறது. அதேபோன்று தமிழில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகளையும் மலையாள எழுத்தாளர் எஸ்.கே.பொற்றேகாட் எழுதிய சிறுகதைகளையும் ஒப்பிட்டு செய்த ஆய்வும் குறிப்பிடத்தக்கது.
'மணிமேகலையில் நீர் ஆதாரங்கள்' என்ற கட்டுரை சங்க காலத்திலேயே தண்ணீரைப் பாதுகாக்கும் நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்குகிறது. 'ஐக்கூக் கவிதைகளில் இயற்கை' என்ற கட்டுரை ஜப்பான் நாட்டில் ஜென் தத்துவத்தின் தாக்கத்தின் காரணமாக உருவான ஐக்கூ கவிதை தமிழில் எவ்வாறெல்லாம் பரிணமித்துள்ளது என்று ஆராய்கிறது. பக்தி இலக்கிய முன்னோடிகளான காரைக்காலம்மையார், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் ஆகியோரைப் பற்றியும் அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பேசும் நூலாசிரியர், நீலபத்மநாபனின், ராஜம் கிருஷ்ணனின் நாவல்களைப் பற்றியும் தனது தெளிவான பார்வைகளை முன்வைக்கிறார்.
திருக்குறளில் தன்முன்னேற்றம் கட்டுரை சமகாலத்தின் தேவைகளுக்கு திருக்குறள் ஈடு கொடுப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com