மீத்தேன் அகதிகள் - த.செயராமன்

மீத்தேன் அகதிகள் - த.செயராமன்

மீத்தேன் அகதிகள் - த.செயராமன்; பக்.208 ;
ரூ.150 ; புத்தகச் சோலை, மயிலாடுதுறை; )04364- 228634.
கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஒரத்தநாடு வட்டம் உள்ளிட்ட காவிரி படுகையில் இந்திய அரசு மீத்தேன் எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறது. அப்படி நடைமுறைப்படுத்தினால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 83 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்நூல் எச்சரிக்கிறது.
நீரியல் விரிசல் முறையில் மீத்தேன் எரிவாயுவை எடுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த நூற்றுக்கணக்கான உள்ளுறைக் கிணறுகள் அமைக்கப்பட வேண்டும். ஒரு கிணறுக்கு 11-15 மில்லியன் லிட்டர் நீர் ஒருமுறைக்கு தேவைப்படும். இதனால் அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்படும்.
மற்றொரு பிரச்னை, நீரியல் விரிசல் முறைக்குப் பிறகு வெளியே எடுக்கப்படும் நீரில் மிகப் பெரிய அளவிற்குக் கழிவுகளும், அபாயகரமான பன்சீன், டொலுயீன், ஈத்தைல் பென்சீன், சைலின்ஸ் உள்ளிட்ட இரசாயனங்களும் கலந்துள்ளன. கதிர்வீச்சுப் பொருட்களும் உள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுக்கவும் நீர் இல்லாமலும், நிலம் அனைத்தும் விவசாயம் செய்யத் தகுதியற்றதாகவும் மாறிவிடும்.
விவசாயத்தை நம்பி அந்தப் பகுதியில் வாழும் மக்கள் வாழ வழியின்றி வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்; எனவே இத்திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று இந்நூல்கூறுகிறது.
சுற்றுச்சூழல் சீர் கேடு அடையக் கூடாது, மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படக் கூடாது என விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com