தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி

தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி - மா.பா.குருசாமி; பக்.190; ரூ.100; காந்திய இலக்கியச் சங்கம், மதுரை-20; )0452- 2533957.
தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி

தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி - மா.பா.குருசாமி; பக்.190; ரூ.100; காந்திய இலக்கியச் சங்கம், மதுரை-20; )0452- 2533957.
ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இரா.கனகசபாபதி. ஆனால் அதற்குப் பின்பு கல்விப் பணியிலும், சமூக சேவைப் பணியிலும் ஈடுபட்டவர். அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், இரா.கனகசபாபதியின் காந்தியப் பற்றையும், சேவைகளையும் இந்நூலில் சுவைபட விவரித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் காந்தியச் சிந்தனையில் சான்றிதழ், பட்டயப் படிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அவர் பணிபுரிந்த ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியிலும் காந்திய சிந்தனைப் படிப்பைத் தொடங்கினார். அதற்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் காமராசர் பல்கலைக்கழக காந்திய சிந்தனைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய கல்லூரி முதல்வரான கனகசபாபதி, மாணவர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒன்றாக அவரும் அமர்ந்து தேர்வு எழுதினார் என்பது வியக்க வைக்கிறது.
கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஏழை மக்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்ட இன்ப சேவா சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். "ஐ.ஏ.எஸ். படிப்புக்கான ஸ்பார்க் மையம்' என்பதைத் தொடங்கி இந்திய அரசுப் பணிப் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார். "பின்தங்கிய பகுதிகளில் ஒரு கல்லூரியை வளர்த்தல்' என்ற தனிச்சிறப்பு உள்ள ஒரு நூலை எழுதினார். இவ்வாறு இரா.கனகசபாபதியின் வாழ்க்கையையும் தொண்டுகளையும் சிறப்புகளையும் இந்நூல் தொகுத்து வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com