அம்பேத்கருக்கு மறுப்பு - ராஜாஜி, அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு

அம்பேத்கருக்கு மறுப்பு - ராஜாஜி, அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு- க.சந்தானம், (இரு நூல்கள் அடங்கியது) தமிழில்: பூ.கொ.சரவணன், மா.பாதமுத்து; பக்.156; ரூ. 130; காந்திய இலக்கியச் சங்கம், மதுரை- 20; )0452-253 3957.
அம்பேத்கருக்கு மறுப்பு - ராஜாஜி, அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு

அம்பேத்கருக்கு மறுப்பு - ராஜாஜி, அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு- க.சந்தானம், (இரு நூல்கள் அடங்கியது) தமிழில்: பூ.கொ.சரவணன், மா.பாதமுத்து; பக்.156; ரூ. 130; காந்திய இலக்கியச் சங்கம், மதுரை- 20; )0452-253 3957.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்திக்கும், தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெறுவதாகும். அது, தனிப்பட்ட தலைவர்களிடையிலான மோதல் மட்டுமல்ல.
தலித் (பட்டியலின) மக்கள் முன்னேறாமல் விடுதலை சாத்தியமில்லை என்று உணர்ந்திருந்த காந்தி, ஹரிஜன முன்னேற்றத்தை காங்கிரஸின் ஓர் அடிப்படைக் கொள்கையாகவே கொண்டிருந்தார். ஆனால், நாட்டு விடுதலையைவிட, தலித் மக்களின் விடுதலையே முதன்மையானது என்பது அம்பேத்கரின் கொள்கை.
காந்தியின் பின்னால் நாடே அணிதிரண்டது, தலித் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட அம்பேத்கருக்கு பெரும் தடையாக விளங்கியது. எனவே காந்தியை அம்பேத்கர் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், 1945-இல் "காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன?' என்ற நூலை அம்பேத்கர் வெளியிட்டார். அந்நூலுக்கு காந்தி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. என்றபோதும், தனது நிழலான ராஜாஜியையும், தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் க.சந்தானத்தையும், அந்நூலுக்கு சரியான விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, ராஜாஜி எழுதிய "அம்பேத்கருக்கு மறுப்பு', க.சந்தானத்தின் "அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு' ஆகிய நூல்கள் வெளியாகின. காந்தியையும் அம்பேத்கரையும் மறுவாசிப்பு செய்ய வேண்டிய தற்போதையச் சூழலில், அவ்விரு நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக காந்திய இலக்கியச் சங்கம் வெளிட்டுள்ளது.
நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பகுதியும் தர்க்கரீதியாக இருப்பதுடன், நயத்தக்க நாகரிகத்துடன் இலங்குகிறது. அம்பேத்கரின் நூலிலிருந்தே காந்தியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் மேற்கோள்களை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டுவது சிறப்பு. இந்நூலுக்கு ஆதாரமான காந்தியின் கடிதங்களை மருத்துவர் சுனீல் கிருஷ்ணன் தமிழில் வழங்கியிருக்கிறார்.
காந்தி - அம்பேத்கர் இருவருக்கிடையிலான முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com