இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும்

இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும் - மு.இராமசுப்பிரமணியன்; பக்.148; ரூ.120; செண்பகம் வெளியீடு, 6 -1, 80ஏ, மூவேந்தர் நகர், விசுவநாதபுரம், மதுரை-625014.
இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும்

இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும் - மு.இராமசுப்பிரமணியன்; பக்.148; ரூ.120; செண்பகம் வெளியீடு, 6 -1, 80ஏ, மூவேந்தர் நகர், விசுவநாதபுரம், மதுரை-625014.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள், அவற்றின் ஆற்றல், அவை இயங்கும்
விதம், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி எல்லாம் இந்நூல் மிகவும் எளிமையாகவும், சுவையாகவும் விளக்கு
கிறது.
ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியுமா? நமது நாட்டின் ரசவாதிகள் இரும்பு, ஈயம், பாதரசம் போன்றவற்றை தங்கமாக மாற்ற முயற்சித்து தோல்வியடைந்தபோது, அறிவியல் அறிஞர்கள் யுரேனியம் தனிமத்திலிருந்து பெறப்படும் ஆல்ஃபாத் துகளை நைட்ரஜன் வாயுவில் செலுத்தி அதை ஆக்சிஜனாக மாற்றிக் காட்டியிருக்கிறார்கள்.
இதுபோன்ற பல்வேறு அறிவியல் உண்மைகளை எளியமுறையில் விளக்கும் நூலாசிரியர், அந்த அறிவியல் உண்மைகளுடன் பொருந்திப் போகிற தமிழ்க் கவிதைகள், அறிஞர் பெருமக்களின் கருத்துகளையும் ஆங்காங்கே கொடுத்திருப்பது வியக்க வைக்கிறது.
உதாரணமாக, உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலும் உள்ள எல்லாப் புரோட்டான்களும், சமநிறையும், சம அளவும், நேர் மின்னோட்டமும் கொண்டவை. எல்லா நியூட்ரான்களும் சமநிறை கொண்டவை; மின்னூட்டம் அற்றவை. எனவே உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்தும் நுண்துகள் அடிப்படையில் சமமானவையே எனக் கூறும் நூலாசிரியர், இதற்கு "காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்ற பாரதியார் கவிதை வரிகளை எடுத்துக் காட்டுகிறார்.
அனல் மின்நிலையம், அணுமின் நிலையம் சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவிப்பவை. சூரிய ஒளி மின்னாற்றலே சிறந்தது என்கிறார் நூலாசிரியர். அதேசமயம், இன்று ஆய்வில் இருக்கிற அணுக்கரு பிணைவு உலைச் சோதனை (இப்போதுள்ள அணுமின்நிலையங்கள் அல்ல) வெற்றி பெற்றால், மின்னாற்றல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும் என்றும் சொல்கிறார்.
அறிவியல் அடிப்படையில் நம்மை, நம்மைச் சுற்றியுள்ள உலகை, நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com