திணையும் திறனாய்வும்

திணையும் திறனாய்வும் - சிவசு; பக்.160; ரூ.125; மேலும் வெளியீட்டகம், 9, இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை-627002.
திணையும் திறனாய்வும்

திணையும் திறனாய்வும் - சிவசு; பக்.160; ரூ.125; மேலும் வெளியீட்டகம், 9, இரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை-627002.
13 கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கும் இந்நூல், மரபு வழிப்பட்ட திறனாய்வுமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மார்க்சியம், பிராய்டியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல், பின் அமைப்பியல் சிந்தனைகளின் அடிப்படையிலான திறனாய்வுப் போக்குகளை ஆராய்கிறது. தொல்காப்பியத்தின் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் இன்றைய இலக்கியங்களையும் விளக்க, திறனாய்வு செய்ய முடியும் என்பதை இந்நூல் நிரூபித்துக் காட்டுகிறது.
புதுமைப்பித்தனின், தமிழவனின், எம்.எம்.தீனின், நீல.பத்மநாபனின் படைப்புகளை - பழமொழிகளைக் கூட - வித்தியாசமான முறையில் பார்க்கும் இந்நூலின் கருத்துகள் சிந்திக்கத் தூண்டுபவை.
"சங்கப் பாடல்களில் குறிப்பாக அகநானூற்றின் ஒன்றிரண்டு பாடல்களின் செய்திகளை, கட்டமைப்பை நீல.பத்மநாபன் நாவல்களில் ஒன்றான பள்ளிகொண்ட
புரம் நாவலில் பிரயோகிக்கிற பொழுது, அப்படைப்பின் வெவ்வேறு பரிமாணங்களைப் புலப்படுத்த முடியும்' என்று நூலாசிரியர் கூறுகிறார்.
ஒரு படைப்பு, அதை வாசிக்கும் ஒருவரின் புரிதல், அனுபவம், அது வாசிக்கப்படும் காலம் எல்லாவற்றுடனும் தொடர்புடையது. ஒரு படைப்பை வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறுவிதமாகப் புரிந்து கொள்வது இயல்பானதே.
"நேற்று ஒரு நூலைப் படிக்கிற பொழுது உண்டான பொருண்மை, இன்று அதையே படிக்கிறபொழுது, நேற்றிலிருந்து வேறுபட்ட பொருளையும், தொடர்ந்து மேலும் மேலும் புதுப்பொருளையும் தருவதுதான் உயரிலக்கியத்தின் இயல்பு' என்ற நூலாசிரியரின் கருத்து ஏற்புடையதே. ஆழமான சிந்தனைகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com