இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் நாடகங்களில் இருத்தலியல் ஒப்பாய்வு

இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் நாடகங்களில் இருத்தலியல் ஒப்பாய்வு - நா.ஜிதேந்திரன்;  பக்-262; ரூ. 200; மேலும் வெளியீடு, 9, ரயில்வே  ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை - 627002.
இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் நாடகங்களில் இருத்தலியல் ஒப்பாய்வு

இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் நாடகங்களில் இருத்தலியல் ஒப்பாய்வு - நா.ஜிதேந்திரன்;  பக்-262; ரூ. 200; மேலும் வெளியீடு, 9, ரயில்வே  ஸ்டேஷன் ரோடு, பாளையங்கோட்டை - 627002.
முனைவர் பட்டத்துக்கான ஆய்வை நூல் வடிவத்தில் வெளியிட்டுள்ளார் ஆசிரியர். இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஆகிய இருவரின் படைப்புகளும் அவற்றின் பின் உள்ள சிந்தனையொழுக்கும் நெறி சார்ந்த இந்திய வாழ்வியலுக்கு எதிரானவை என்பதால் அவை ஆய்வுப் பொருளாகியுள்ளன. அதே சமயத்தில், இரு நாடகாசிரியர்களின் முக்கியப் படைப்புகளுக்கான கருப்பொருள் இந்த நாட்டின் மரபு மற்றும் வரலாற்றிலிருந்து பெறப்பட்டவைதாம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். மேற்கத்திய சமூகக் கோட்பாடுகள் என்னும் கண்ணாடி வழியாக நமது மரபுகளை புதிய காலத்துக்கான மீள்பார்வைக்கு உள்படுத்தும்போது பல முரண்களைக் காண்பது இயல்பு.
தானறிந்த தத்துவக் கோட்பாடுகள் வரிசையில் "விசிறி' என்கிற அளவில் பெரியாரியத்தை வியந்த பின்னர் மார்க்சியத்தைக் குறிப்பிடுகிறார் ஜிதேந்திரன். அதனை 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் பரவியதாகவும் தட்டி விடுகிறார். தத்துவ இயல்களின் பட்டியலை அடுக்கி ஆய்வு ஏட்டில் கனம் காண முயலும்போது ஏற்பட்ட சிறிய தடுமாற்றமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். மிக அடிப்படையான கால வரிசை இல்லை. இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் நாடகங்கள் இயற்றப்பட்ட காலத்தில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் எங்கே வந்தார்?
இந்திய தத்துவ, சமூக நெறி மரபின் மறுத்தலாக நாடகாசிரியர்களின் சிந்தனை அமைந்துள்ளது என்பதை நிறுவ இந்திய தத்துவப் பிரிவுகளின் சுருக்கத்தை இடையில் அளித்துள்ளார். அதே போல இருத்தலியல் உள்ளிட்ட மேற்கத்திய கோட்பாடுகளையும் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com