ஜெயகாந்த நினைவுகள்

ஜெயகாந்த நினைவுகள் - தொகுப்பாசிரியர் : சேதுபதி; பக்.392; ரூ.300; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1; )0452- 2345971.
ஜெயகாந்த நினைவுகள்

ஜெயகாந்த நினைவுகள் - தொகுப்பாசிரியர் : சேதுபதி; பக்.392; ரூ.300; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1; )0452- 2345971.
சிலரைப் பற்றிய செய்திகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பூட்டுவதே இல்லை. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் ஜெயகாந்தன். அவர் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரோடு நேரடியாகப் பழகிய பலரும் பல்வேறு இதழ்களில் எழுதியவற்றைத் தேடிப் பிடித்து தொகுத்து நூலாக்கியிருக்கிறார் சேதுபதி.
ஜெயகாந்தனோடு பழகிய ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு விதமானது என்றாலும், எல்லாமே சுவையாக இருக்கின்றன. குறிப்பாக, பி.ச.குப்புசாமி (நான் அறிந்த ஜெயகாந்தன்),
ஈரோடு தமிழன்பன் (சில இரவுகள் விடிவதில்லை), பாவண்ணன் (என்றென்றும் இருக்கும் ஜெயகாந்தன்),
எஸ்.இராமச்சந்திரன் (தோழர் ஜெயகாந்தன்) கட்டுரைகள் வித்தியாசமான அனுபவங்கள் நிறைந்தவை.
ஜெயகாந்தனைப் பற்றி அதிகம் அறியப்படாத தகவல்களும் இத்தொகுப்பில் ஆங்காங்கே காணப்படுகின்றன. உதாரணமாக, குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் பாலதண்டாயுதம், ஈ.வெ.கி. சம்பத், தா.பாண்டியன் போன்றோருடன் ஜெயகாந்தனும் பங்கு கொண்டு பேசியிருக்கிறார். புதுச்சேரி கம்பன் விழாவில் பேச வந்த ஜெயகாந்தன், கம்பராமாயணம் குறித்து எதுவும் பேசாமல் கம்பரின் "ஏர் எழுபது' குறித்து ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றி அவையோரைத் திகைக்க வைத்திருக்கிறார் - இப்படி பல.
"சுயதரிசனங்களின் தரிசனம்' என்ற தலைப்பில் எழுத்தாளர் நவபாரதி எழுதியிருக்கும் அணிந்துரை இத்தொகுப்புக்கு ஒரு மகுடம்.
"பலருக்கும் தெரிந்திருக்கும் ஜெயகாந்தன் என்கிற படைப்பாளியை அறிந்து கொள்வதற்கும், அதன்வழி அவர்தம் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைத் தேர்ந்து, தெளிந்து கொள்வதற்கும் இந்நூல் உதவி புரியும்' என்கிற தொகுப்பாசிரியரின் நம்பிக்கை பொய்க்கவில்லை.
இத்தொகுப்பைப் படித்து முடிக்கும்போது ஜெயகாந்தனோடு ஒரு நீண்ட பயணம் போய் வந்த நிறைவும் மகிழ்வும் ஏற்படுகிறது. ஜெயகாந்தன் குறித்த சிறந்த
ஆவணம் இத்தொகுப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com