மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - வித்வான் வே.லட்சுமணன்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - வித்வான் வே.லட்சுமணன்

பக்.288; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை - 17; 
044 - 2434 2810.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது 1985-ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது 5-ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளது. 'புகழுக்கு ஒருவர்', 'எடுத்ததை முடிப்பவர்', 'எதிர்ப்பினை வெல்பவர்' ஆகிய தலைப்புகளில் முதல் மூன்று பாகங்களில் எம்.ஜி.ஆர். நாடக அனுபவங்கள், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அடைந்த ஏமாற்றங்கள், திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் பெற்ற வெற்றிகள் தொடர்பான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. 
ஆரம்ப காலங்களில் 'நல்ல தங்காள்' நாடகத்தில் ஏழாவது பையன் வேடத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர். நாடகத்தின் உச்சகட்டக் காட்சியில், ' என்னையாவது உயிருடன் விட்டுவிங்கள் அம்மா! ஈமக் கடன் செய்வதற்கு நான் ஒருவனாவது தேவையல்லவா? ' என்று அழுது அரற்றிப் புலம்பி நடிக்க வேண்டும். இதனால் அடித்து துன்புறுத்தி, வலி தாங்காமல் அழ வைத்துத்தான் மேடைக்கு எம்.ஜி.ஆர். அனுப்பப்படுவாராம் என்பது போன்ற மனதை நெகிழ வைக்கும் சம்பவங்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
'எண் ஜோதிடத்தில் எம்.ஜி.ஆர்.'- நூலின் இறுதி பாகம். இந்த பாகத்தில் எண் ஜோதிடத்தில் எம்.ஜி.ஆரின் பெயருக்கு என்னென்ன சிறப்பம்சங்கள் என்பதை நூலாசிரியர் வே.லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் ஜோதிட சாத்திரங்களில் பயிற்சி பெற்றவர் என்பதால் எண் கணிதத்தின் வழியாகவும் எம்.ஜி.ஆரை அணுகியுள்ளார்.
எம்.ஜி.ஆர். என்ற ஒரு தலைவரின் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள், எளிய தமிழில் தொகுக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com