புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம் (நீண்ட பேருரைகள் பாலி/ ஆங்கில மொழி நூல்களிலிருந்து) - தமிழில்: போதிபால மகாதேரோ; பக்.456; ரூ.500; திரிபிடக தமிழ் நிறுவனம், 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், சேலையூர்,
புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம் (நீண்ட பேருரைகள் பாலி/ ஆங்கில மொழி நூல்களிலிருந்து) - தமிழில்: போதிபால மகாதேரோ; பக்.456; ரூ.500; திரிபிடக தமிழ் நிறுவனம், 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், சேலையூர், சென்னை-126.
 புத்தர் ஞானம் பெற்ற பின்பு 45 ஆண்டுகள் போதனைகள் செய்துள்ளார். அவை அவருடைய தாய்மொழியான பாலி மொழியில் பல நூறு ஆண்டுகளாகச் செவி வழியாக வழங்கப்பட்டன. போதனைகள் "திரிபிடகம்' என அழைக்கப்பட்டன. கி.மு.77 ஆம் ஆண்டு இலங்கையை ஆண்ட வட்டகாமினி அபயன் என்ற மன்னன், நான்காவது பெüத்த சங்கத்தைக் கூட்டி, பாலி மொழியின் முழு திரிபிடகத்தை சிங்கள மொழியில் எழுத ஆணையிட்டான். அதன் பிறகு புத்தரின் போதனைகளுக்கு விளக்க உரைகள், விளக்க உரைகளுக்கு துணை விளக்க உரைகள் எழுதப்பட்டன. கி.பி.19 ஆம் நூற்றாண்டில்தான் புத்தரின் போதனைகள் - திரிபிடகம் - ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. திரிபிடகத்தின் முதல் பிடகமான சூத்திர (சுத்த) பிடகத்தில் உள்ள ஐந்து நிகாயங்களில் ஒன்றான தீக நிகாயம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
 புத்தர் தனது வாழ்நாளில் பல இடங்களுக்குப் பயணம் செய்து, பல மனிதர்களைச் சந்தித்து, விவாதம் செய்து, போதனைகள் செய்திருக்கிறார். இந்நூலில் அந்நிகழ்வுகள், போதனைகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கான அறநெறிகள் சிகாலோவாத சத்தங் என்ற பெயரில் தரப்பட்டுள்ளன. இக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக அவை உள்ளன. எடுத்துக்காட்டாக சிலவற்றைச் சொல்லலாம்.
 "கணவன் மனைவியிடம் ஆதரவு உடையவனாக இருக்க வேண்டும்; அவளை வெறுக்கக் கூடாது; அவளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; அவளுக்குரிய அதிகாரத்தை அவளுக்கே கொடுக்க வேண்டும். '
 "முதலாளி, பணி செய்பவர்களின் இயல்புக்கு ஏற்ப வேலைகளைக் கொடுக்க வேண்டும்; அவர்களுக்கு உணவும் ஊதியமும் வழங்க வேண்டும்; நோயுற்ற காலத்தில் அவர்களைப் போஷிக்க வேண்டும்; தேவைப்பட்டபோது அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். '
 அடுத்துவரும் பதிப்புகளில் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com