பெண்மை ஒரு வரம் - பா.ஜோதி

நிர்மலாசாமி; பக்.184; ரூ.120; விஜயா பதிப்பகம், கோவை - 1; )0422 - 2382614."தினமணி மகளிர்மணி'யில் ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதி வெளிவந்த 30 தொடர்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 
பெண்மை ஒரு வரம் - பா.ஜோதி

நிர்மலாசாமி; பக்.184; ரூ.120; விஜயா பதிப்பகம், கோவை - 1; )0422 - 2382614.
"தினமணி மகளிர்மணி'யில் ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதி வெளிவந்த 30 தொடர்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 
பெண் என்பவள் தன் தாய், தந்தையிடம் கற்ற கலாசாரத்தை, பண்புகளை தன் மகளுக்கு சொல்லித் தருவாள். ஒரு தலைமுறையிலிருந்து உள்வாங்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் "கலாசார காவலர்கள்' என்று பெண்களை அறிமுகப்படுத்துகிறார் நூலின் 
ஆசிரியர். 
குழந்தைப் பருவம், பதின் பருவம், இளமைக் காலம், கல்வி, காதல், திருமண பந்தம் என வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் பெண்மையை எப்படி வரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நூலில் விளக்கப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட, தன் குடும்பத்தில் நடந்த, பணியாற்றி இடங்களில் நடைபெற்ற சம்பவங்களையே எடுத்துக்காட்டுகளாகக் கூறி விளக்கியுள்ளார் ஆசிரியர்.
பெண்மையைப் போற்றும் கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும், பெண்களுக்கு பெண்களே எதிரியாக மாறும் சம்பவங்களையும் குறிப்பிட மறக்கவில்லை. 
திருமணம் போன்ற நிகழ்வுகளின்போது பெண்கள் நகைகள் அனைத்தையும் அள்ளிப்போட்டு வரும் போக்கு மாற வேண்டும் என்கிறார் ஆசிரியர். "பின் தூங்கி முன் எழ வேண்டும் பெண்' என்பன போன்று சமூகத்தில் நிலவி வரும் பிற்போக்கு சிந்தனைகளைக் களைய இந்த நூல் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com