இலக்கியச் சங்கமம்

சுத்த சன்மார்க்க நிலையம் நடத்தும் அருட்செல்வர் நா.மகாலிங்கம் 3 ஆம் ஆண்டு நினைவுநாள் விழா.

சுத்த சன்மார்க்க நிலையம் நடத்தும் அருட்செல்வர் நா.மகாலிங்கம் 3 ஆம் ஆண்டு நினைவுநாள் விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: இரா.செல்வராஜ், கே.முருகன், ஜெய.ராஜமூர்த்தி, வெ.இராமானுஜம் ; அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் கலையரங்கம், வ.கு.மே.நி.பள்ளி வளாகம், வடலூர்; 2.10.17 காலை 10.00.

பொற்றாமரை கலை -இலக்கிய அரங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: வ.வெ.சுப்பிரமணியன், மரபின்மைந்தன் முத்தையா; டிஏஜி அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி (தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராயநகர், சென்னை; 2.10.17 மாலை 5.30.

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம், கீற்று வெளியீட்டகம் இணைந்து நடத்தும் "ஹெச்.ஜி.ரசூலின் படைப்புலகம் ' - மாலை நேர சிறு கூடல். பங்கேற்பு: ஜமாலன், ஆர்.அபிலாஷ், அனார், ஏ.பி.எம். இத்ரீஸ், எச்.முஜீப்ரகுமான்; இக்சா மய்யம், எழும்பூர் மியூசியம் எதிரில், சென்னை; 2.10.17 மாலை 5.30.

இராமலிங்கர் பணிமன்றம், ஏவி.எம்.அறக்கட்டளை இணைந்து நடத்தும் அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா. 2.10.17 காலை 9.00; பங்கேற்பு: ஊரன் அடிகள், இல.கணேசன், ம.மாணிக்கம், பி.எஸ். இராகவன், த.இராமலிங்கம் ; 3.10.17 மாலை 6.00; பங்கேற்பு: பெ.சிதம்பரநாதன், கோவை சிவப்பிரகாச சுவாமிகள், ஸ்டாலின் குணசேகரன்; 4.10.17 மாலை 6.00; பங்கேற்பு: சிற்பி பாலசுப்பிரமணியம், பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், சுதா சேஷையன்; 5.10.17 காலை 10.00; பங்கேற்பு: இலங்கை ஜெயராஜ், சொ.சொ.மீ.சுந்தரம், அரங்க இராமலிங்கம், இரா.செல்வராஜ் ; ஏவி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபம், மயிலாப்பூர், சென்னை.

சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கான ம.பொ.சி. விருது வழங்கும் விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: ஸ்டாலின் குணசேகரன், ம.பொ.சி.தி.பரமேசுவரி, அ.கோபாலகிருஷ்ணன், சி.ஞானமணி, வே.சேதுராமன், சி.வி.சிதம்பரம், ம.பொ.சி.தி.ஞானசிவம் ; டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரி (சத்யா ஸ்டுடியோ), ராஜா அண்ணாமலை
புரம், சென்னை-28 ; 3.10.17 பிற்பகல் 3.00.

சென்னை கம்பன் கழகம் நடத்தும் "வழிவழி வள்ளுவம்' தொடர் நிகழ்ச்சி. தலைமை: இராம வீரப்பன் ; பங்கேற்பு: உ.தேவதாசு, மறைமலை இலக்குவனார், சாரதா நம்பி ஆருரன், இலக்கியவீதி இனியவன் ; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4; 3.10.17 மாலை 6.30.

சாகித்திய அகாதெமி, புதுவை தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் "தமிழ்க் கவிதையியலும் யாப்பும்' - கருத்தரங்கம். 4.10.17 பங்கேற்பு: கி.நாச்சிமுத்து, பொற்கோ, இரா.கோதண்டராமன், ய.மணிகண்டன், தமிழவன்; 5.10.17 பங்கேற்பு: கோ.விஜயவேணுகோபால், இந்திரா மனுவேல், து.இரவிக்குமார், க.பஞ்சாங்கம் இரா.காமராசு, சீனு மோகன்தாஸ், ம.இலெ.தங்கப்பா ; தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி ; இரண்டு நாட்களும் காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்கம்.

திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: ப.ச.ஏசுதாசன்; பங்கேற்பு: கா.வேழவேந்தன் ; தொல்காப்பியர் அறக்கட்டளை வளாகம், 121/14, கெங்கு ரெட்டி சாலை, எழும்பூர், சென்னை-8; 8.10.17 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com