நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும்

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும் - தமிழ்மணவாளன்; பக்.400; ரூ390; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும்

நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் காலமும் வெளியும் - தமிழ்மணவாளன்; பக்.400; ரூ390; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
ஓர் ஆய்வேடு நூலாகியுள்ளது. தமிழ்க் கவிதை மரபில் நவீன தமிழ்க் கவிதைகள், நவீன தமிழ்க் கவிதைகளில் நாடக ஆக்கக் கூறுகள், நவீன தமிழ்க் கவிதைகளில் பாத்திரப் படைப்பும் உரையாடலும், நவீன தமிழ்க் கவிதைகளில் காலமும் வெளியும் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு திகழும் இந்நூல், எடுத்துக் கொண்ட தலைப்புக்குத் தகுந்தாற்போல இந்நான்கு இயல்களிலும் பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. 
நூல் முழுவதும் நவீன தமிழ்க் கவிதை இலக்கியம் பற்றி அலசி ஆராயப்பட்டிருப்பதால், முக்கியமான சிலர் வி'டுபட்டுவிட்டனரோ என்றுகூடத் தோன்றுகிறது. குறிப்பாக நவீன தமிழ்க் கவிதை இலக்கியத்தின் முன்னோடிகள் என்று எடுத்துக்கொண்டால், ந.பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, நகுலன் போன்றோர் நினைவுக்கு வருவர். ஆனால், அவர்களை இந்நூலில் காணமுடியவில்லை.
வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் நாடகமும் கவிதையும் இணைந்தே காணப்படுகின்றன. நாடக ஆக்கக் கூறுகளைப் பற்றி தொல்காப்பியர் விளக்கும்போது அதை எண்வகை மெய்ப்பாடுகளில் வைத்தே விளக்கியிருப்பார். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் முதலிய எட்டுவகையான மெய்ப்பாடுகள் தோன்ற நடிப்பதே நாடகக் கலையின், நாடகக் கூறின் சிறப்பம்சமாகும். அத்தகைய நாடகக் கூறுகள் நவீன தமிழ்க் கவிதைகளில் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது இந்நூல். 
நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக்கூறுகள் குறித்த பகுதியில், கலை, இலக்கியம், மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிக வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், சமூகம் முதலியவை விளக்கமுறுகின்றன. நாற்பது கவிஞர்களின் நவீனத் தமிழ்க் கவிதை நூல்களை மையமாகக் கொண்டும், கால எல்லை வரையறுக்கப்படாமலும் இவ்வாய்வு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com