காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும்

காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும் - ஆ.திருநாவுக்கரசன்; பக்.418; ரூ.350 ; எழிலினி பதிப்பகம், சென்னை-8 ; )044 - 2819 3206.
காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும்

காட்டு மூங்கிலும் புல்லாங்குழலும் - ஆ.திருநாவுக்கரசன்; பக்.418; ரூ.350 ; எழிலினி பதிப்பகம், சென்னை-8 ; )044 - 2819 3206.
திருநெல்வேலி அருகே உள்ள சிற்றூர் பெரியநாயகிபுரம். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் தாசில்தாராகப் பணிபுரிந்த முருகேசன்பிள்ளை, அந்த ஊரைச் சேர்ந்தவர். அவருடய வாலிபப் பருவத்தில் தொடங்கும் இந்நாவல், அவருடைய மகன் சிவமணியின் 80 ஆண்டுகால வாழ்க்கையுடன் நிறைவடைகிறது. இந்த 80 ஆண்டுகாலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் இந்நாவலில் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 
மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகள், அவர்களின் கொண்டாட்டங்கள், துக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மதிப்பீடுகள் போன்ற அனைத்தும் நம் கண்முன் விரிகின்றன. 
தனிநபர் விருப்பு, வெறுப்புகள் ஒருபுறம் இருக்க அன்றைய சமுதாயத்தில் நிலவுடைமையாளருக்கும், நிலத்தில் வேலை செய்பவருக்கும் இடையே புகைந்து கொண்டிருந்த முரண்பாடுகள், கல்லூரி விடுதியில் மேல்சாதியினருக்குக் கொடுக்கப்பட்ட தனிச்சலுகைகள், அதை எதிர்த்து ஒலித்த குரல்கள், சொந்தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள் என எல்லாம் பதிவாகியிருக்கிறது இந்நாவலில். எனினும் பல தலைமுறைகள் கடந்தாலும், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பிரச்னைகள், நிகழ்வுகள் வேறு வடிவங்களில் இப்போதும் தோன்றுவதை நாவலை வாசிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. "தண்ணி பாத்தாத்தான வெள்ளாம செழிக்கும். ஆறு வத்திப்போச்சு. மேமழையும் கெடையாது. மனுஷங்க பொழைச்சுக் கெடக்குறதே பெரிய விசயமாகிப் போச்சு'
"இது பஞ்ச காலம். சாப்புட மக்காச் சோள மாவு கெடச்சாக்கூட அமிர்தமே கெடச்ச மாதிரி சனங்க ஆச்சரியத்துல கண்ண விரிக்குற காலம் இது' இவ்வாறு வறுமையும், பஞ்சமும், வறட்சியும் ஏற்படுத்தும் பாதிப்புகள் இருந்தாலும், ""பஞ்சமும் பட்டினியும் திங்கிறதுக்கு எங்க உசுரக் கூட பந்தியா வச்சிருவமே ஒழிய, பந்தியில ஒக்கார்றதுக்காக மானத்த சந்தியில நிறுத்த மாட்டோம்'' என்று சுயமரியாதை உணர்வுடன் வாழ்ந்தவர்களையும் நாவல் அறிமுகப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com