கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக்.356 ; ரூ.225; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2; )044-2845 7666.
கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக்.356 ; ரூ.225; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2; )044-2845 7666.
வாரியார் சுவாமிகள் தன் வாழ்க்கை வரலாற்றை தனது அற்புத நடையில் பதிவு செய்திருக்கும் நூல். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் ஆன்மிக சொற்பொழிவின் சிகரமாகத் திகழ்ந்த வாரியாரின் இளமைப் பருவ நிகழ்வுகள் வியக்க வைக்கின்றன. 52 கி.மீ. தூரம் நடந்து வந்து, பொய் சொல்ல மறுத்து, உண்மையைச் சொன்னதால் சாமியைத் தரிசனம் செய்ய முடியாமல் ஊர் திரும்பிய வாரியாரின் பாட்டனார் சாமியண்ணா, இந்த வரலாற்று நூலில் ஒரு கல்வெட்டாகப் பதிந்து விடுகிறார். சிறுவன் கிருபானந்த வாரியை பள்ளிக்கு அனுப்பாமல், தந்தையார் மல்லைய தாசரே கல்வி கற்பிக்கிறார். "நிலம் அழுக்காக இருப்பதால் நீ உடையை மடக்கிக்கொண்டு உட்காருகின்றாய். அதுபோன்று, உள்ளத்திலே அழுக்குகள் இருந்தால் அந்த உள்ளத்திலே இறைவன் இருக்கக் கூசுவான்' என்று தாயார் கனகவல்லியம்மையார் கூறியது தம் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது என்று எழுதுகிறார் வாரியார். "குல வித்தை கல்லாமலே பாகம் படும்' என்பதுபோன்று, "தந்தையாரின் சொற்பொழிவைக் கேட்டுக் கேட்டு பாதி வித்தை படிக்காமலே எய்தியது' என்று தந்தையைப் போற்றுகிறார். தந்தை உபன்யாசம் செய்த ஊருக்குத் தான் செல்ல நேர்ந்ததைக் குறிப்பிடும்போது, "ஆனை மேய்ந்த காட்டில் ஆடு நுழைந்தது போலிருந்தது' என்கிறார். மறுநாள் ஊர்மக்கள் தந்தையிடம், "இனி உங்கள் மகனே சொற்பொழிவு செய்யட்டும்' என்கிறார்கள். இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. வீணை குரு வரதாச்சாரியாரிடம் வீணை கற்றல், பாம்பன் சுவாமிகளைச் சந்தித்தல், ஸ்ரீசைலம், பத்ரிநாத், காசி, கோலாலம்பூர் பயண அனுபவங்கள், தேவரின் திரைப்படங்களில் பங்கேற்றது என வாரியாரின் அனுபவங்கள் நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com