சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி - க.மணி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி - க.மணி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி - க.மணி; பக்.104; ரூ.100; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-3; )04259 - 236030.

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி - க.மணி; பக்.104; ரூ.100; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-3; )04259 - 236030.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மிகவும் எளியமுறையில் விளக்கும் நூல். 
இடம், வலம், மேலே, கீழே, சிறியது, பெரியது, அதிக தூரம், குறைந்த தூரம் ஆகியவை உண்மையில் சார்பானவை. ஒளியின் வேகம் மாறுவதேயில்லை. அது சார்பற்றது. காலம், இடம் சார்புடையவை. திசை சார்புடையது. 
பேரண்டப் பிறப்பு, முடிவு, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு போன்றவற்றை சார்பியல் கோட்பாடு இல்லாமல் விளக்க முடிவதில்லை. பல்சார், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம் போன்ற சம்பவங்கள் சார்பியல் கோட்பாட்டின் மூலமே தெரிய வந்தவை. 
ஐன்ஸ்டீனின் E=mcஎன்ற கோட்பாடு அணுகுண்டை உருவாக்கத் துணை நின்றது. இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்ட போது ஐன்ஸ்டீன் அதற்காக மிகவும் வருந்தினார்.
இவ்வாறு சார்பியல் கோட்பாட்டின் சிறப்புகளையும், இன்று வரை அதற்குள்ள முக்கியத்துவத்தையும், நியூட்டன் உட்பட பிற அறிவியலாளர்களுக்கும் ஐன்ஸ்டீனுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றியும் மிக எளிமையாகக் கூறும் நூல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com