செய்வினை செயப்பாட்டுவினை

செய்வினை செயப்பாட்டுவினை - உஷாதீபன்; பக்.224; ரூ.170; காகிதம் பதிப்பகம், 13 பி, டைப் 2 குடியிருப்பு, வட்டம்-4, நெய்வேலி-607801.
செய்வினை செயப்பாட்டுவினை

செய்வினை செயப்பாட்டுவினை - உஷாதீபன்; பக்.224; ரூ.170; காகிதம் பதிப்பகம், 13 பி, டைப் 2 குடியிருப்பு, வட்டம்-4, நெய்வேலி-607801.
வயதான பெரியவர்கள், நவீன சூழலுக்குப் பொருந்த முடியாமல் தலைமுறை இடைவெளியில் தவிப்பவர்களாக இருக்கிறார்கள். இச்
சிறுகதைத் தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. அவற்றில் 5 கதைகள் முதியோர் மனநிலை, தவிப்புகளைச் சொல்லும் கதைகள். "செய்வினை செயப்பாட்டுவினை' கதையில் வரும் அண்ணாச்சி சங்கரலிங்கம் ஒரு மிகப் பெரிய ஆளுமை. அவர் ஒரு சங்கத்தின் தலைவர். எப்போதும் வெள்ளைச் சட்டை, வேட்டி. ஒரே சீரான அளந்து வைத்தது போலான நடை. எதிர் அணியினர் அவரது பலவீனத்தைக் கண்டறிந்து மோகவலையில் சிக்க வைத்துவிடுகின்றனர். அற்பமான பலவீனம் ஆளுமையின் அந்தஸ்தை மட்டுமின்றி, உயிரையும் பலி வாங்கிவிடுகிறது.
தொகுப்பில் உள்ள "தனிமை' சிறுகதை குறிப்பிடத்தக்கது. இறப்பில் சுமங்கலியாய் மனைவி முந்திக் கொள்ள, இருதரப்பு புரிதலின்றி மகனும் வெளியேறிவிட, காலன் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அனந்தராமனின் பாத்திரப் படைப்பு யதார்த்தம். 
"கணிதம்'. "ரெட்டைச்சுழி', "எள்ளுருண்டை' கதைகளும் வாசகர்களைக் கவரும் தனித்துவமான உணர்வுகளையும், வாழ்வியல் அர்த்தங்களையும் எளிய நடையில் வழங்கி இருப்பது சிறப்பு. 
"மனதைச் சாக்கடையாக்கும் விஷயங்களை என்னால் சொல்ல முடியாது' என்று நூலாசிரியர் முன்னுரையில் அளித்துள்ள வாக்குமூலம் பாராட்டத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com