அறிவியல் எது? ஏன்? எப்படி?

அறிவியல் எது? ஏன்? எப்படி? - என்.ராமதுரை ; இரண்டு பாகங்கள்; ஒவ்வொரு பாகமும்  பக்.256; ரூ.225; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.
அறிவியல் எது? ஏன்? எப்படி?

அறிவியல் எது? ஏன்? எப்படி? - என்.ராமதுரை ; இரண்டு பாகங்கள்; ஒவ்வொரு பாகமும்  பக்.256; ரூ.225; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.
பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 195 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாம் தினம்தோறும் கேள்விப்படும் பல விஷயங்களை நமக்குத் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட பலவிஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எவர்சில்வர் என்பது எந்த உலோகத்தால் ஆனது? எப்படி உருவாக்குகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் வங்கக் கடலில் புயல் சின்னம் என்ற செய்தியைத் தெரிந்து கொள்வோம். குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியாது. 
தங்கச்சுரங்கம், நிலக்கரிச் சுரங்கம் என்றெல்லாம் பேசுவோம். ஆனால் சுரங்கத்துக்குள் உள்ள வெப்பநிலை நமக்குத் தெரியாது. எஙப என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் எஙப என்றால் என்ன? அதன் அடிப்படையில் எப்படி நேரத்தைக் கணக்கிடுகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அணுகுண்டு, அணுஉலைகள், கதிர்வீச்சு ஆகியவை ஏற்படுத்தும் ஆபத்துகள், நிலநடுக்கம் ஏற்படுவது எதனால் என்பது போன்ற நமக்குத் தெரியாத பல விஷயங்களை மிகவும் எளிமையான நடையில் இந்நூல் விளக்குகிறது. அறிவியலில் ஆர்வம் உள்ளவர்கள், பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com