கவித்துவம் என்றால் என்ன?

கவித்துவம் என்றால் என்ன?

கவித்துவம் என்றால் என்ன? - வெ.இரவீந்திரன்; பக்.192; ரூ150; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108.

கவித்துவம் என்றால் என்ன? - வெ.இரவீந்திரன்; பக்.192; ரூ150; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108.
முகநூலில் "கவித்துவம் என்றால் என்ன?' என்று சிலர் கேள்வி கேட்க, அதற்கான விடையாக எழுதப்பட்ட 34 கட்டுரைகள் இந்நூலில் மலர்ந்துள்ளன.
முன்னுரையில் கவித்துவம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தில், பவணந்தி முனிவரின் நன்னூல், கம்பர், மகாகவி பாரதியார், நாமக்கல் கவிஞர் போன்றோரின் கவிதைகளைச் சுட்டிக்காட்டியதுடன், "கவிபாடலாம் வாங்க' என்ற தம்நூலில் கி.வா.ஜ. எவ்வாறு கவிபாட வேண்டும் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளார் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். கவித்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி, கவித்துவத்தோடு குழந்தை இலக்கியம், கற்பனை, செய்யுள், உரைநடை, அசைச்சொற்கள், அணிகள், திரையிசைப் பாடல்கள், ஆகுபெயர்கள், புதுக்கவிதை, இயல்பு நவிற்சி, மறைபொருள், சொல் வன்மை, பக்திச்சுவை, சொற் செறிவு, காமச்சுவை, பகடி, மெய்ப்பாடுகள், வினைப்போலிகள், கருத்தாழம், சொற்சிக்கனம், உளவியல், எதுகை மோனை முதலிய பலவும் விளக்கப்பட்டுள்ளன.
பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், திருக்குறள், புறநானூறு, பிரபுலிங்கலீலை, தேவாரம், திருவருட்பா, கம்பராமாயணம், நளவெண்பா, கந்தரலங்காரம், யாகோபு வைத்திய சிகாமணி, நவநீத பாட்டியல், திருவரங்கக் கலம்பகம், பெரியபுராணம் முதலிய பல்வேறு இலக்கியங்களிலிருந்தும் கவித்துவமான பாடல்களை மேற்கோள்காட்டும்போது, பல இடங்களில் கவித்துவமுள்ள கவிதைகளுக்குத் தன்னுடைய கவிதைகளையே நூலாசிரியர் (ஒட்டிப் பாடியது, இரவீந்திரன்) எடுத்துக்காட்டாகத் தந்திருப்பது சிறப்பு. யாப்புடன் கூடிய கவிபுனையும் ஆற்றல் பெற விரும்புபவர்களுக்கு இந்நூல் சிறந்த கையேடாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com