அம்மாவின் கதை!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... அம்மாவின் கதை! - எஸ்.கிருபாகரன்; பக்.248; ரூ.175; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.
அம்மாவின் கதை!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... அம்மாவின் கதை! - எஸ்.கிருபாகரன்; பக்.248; ரூ.175; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இந்நூல். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்பான ஒரு நாவலைப் படித்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா சிறுமியாக இருந்தபோது, பூங்காவில் சந்தித்த கழைக்கூத்தாடிச் சிறுமியைப் படிக்க வைக்கும்படி கூறி, தன் தங்கக் காதணிகளைக் கழற்றிக் கொடுத்தது; சர்ச் பார்க் பள்ளியில் படித்த தோழி நளினியை பிரபல நடிகையான பின்னர் தேடிச் சென்று சந்தித்துப் பேசி மகிழ்ந்தது; அமெரிக்க நடிகர் ராக் ஹட்சனின் போட்டோ ஆல்பத்தை பொக்கிஷம் எனக் கூறியதால் ஆசிரியையிடம் அடி வாங்கியது; கன்னட இயக்குநர் ஆதுர்த்தி சுப்பாராவ் மேக் அப் டெஸ்ட் எடுத்து ஜெயலலிதாவை நிராகரித்தது, திருமதி ஒய்.ஜி.பி.யின் வற்புறுத்தலால் முதன்முறையாக ஜெயலலிதா "தி ஹோல் ட்ரூத்' ஆங்கில நாடகத்தில் சோவுடன் இணைந்து நடித்தது; "ஸ்ரீசைல மகாத்மியம்' தொடங்கி "நதியைத் தேடிவந்த கடல்' வரை 19 ஆண்டுகளில் 137 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தது; தாயார் சந்தியாவின் கனவை நிறைவேற்ற நாடகக்குழு தொடங்கியது; "காவிரி தந்த கலைச்செல்வி' என்ற நாடகத்தை நடத்தி, உலகத் தமிழ் மாநாட்டு நிதிக்காக ரூ.5 லட்சத்தை அண்ணாதுரையிடம் வழங்கியது; 1982 இல் அரசியலில் பிரவேசித்தது முதல் அரசியல் களத்தில் அவர் படைத்த சாதனைகள் என பல முக்கியமான சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த ஆவணமாக இந்நூல் மிளிர்கிறது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com