ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள்

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை-கோ.உத்திராடம்; பக்.168; ரூ.150; நாம் தமிழர் பதிப்பகம், சென்னை- 5; )044-2844 3791. 
ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள்

ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை-கோ.உத்திராடம்; பக்.168; ரூ.150; நாம் தமிழர் பதிப்பகம், சென்னை- 5; )044-2844 3791. 
இந்நூலில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் தினமணியில் (தமிழ்மணி) வெளி வந்தவை. 
ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்கள், முதுமக்கள் தாழி, கட்டடங்கள், உறை கிணறுகள், தொன்மை எழுத்துகள் ஆகியவை பண்டையத் தமிழர்கள் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கு முக்கியச் சான்றாதாரங்களாக உள்ளன என்று கூறும் நூலாசிரியர், அவற்றுடன் தொடர்புடைய இலக்கியங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். 
மேலும், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, சுவர் ஓவியங்களில் காணப்படும் மக்களின் வாழ்வியல் முறை, இயல், இசை, நாடகம் குறித்த பதிவுகள், பண்ட மாற்று முறை, மன்னர்களின் ஆட்சி முறை, அவர்கள் வழங்கிய கொடை, நீர் மேலாண்மை, நில ஆவணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்நூலில் பதிவு செய்துள்ளார். 
பல அகழாய்வுகளின் அறிக்கைகளும், ஆய்வு முடிவுகளும் நூல் வடிவம் பெறாமல் கோப்புகளில் உறங்கிக் கிடப்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியிருப்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com